
மனுஸ்மிருதியில் பெண்களுக்கு எதிராக உள்ள கொச்சையான கருத்துகளை சுட்டிக்காட்டிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்தும் எதிர்த்தும் தமிழகத்தில் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் புகார் கொடுக்கப்படுகிறது. இதனை வைத்து திருமாவை கைது செய்யலாமா என டெல்லி திட்டமிடுவதாக செய்திகள் கசிகின்றன.
இதற்கிடையே, திருமாவை தமிழக போலிஸார் கைது செய்வதை விட, வேறு மாநில போலீஸார் கைது செய்வதுதான் எஃபெக்டாக இருக்கும் என ஒரு யோசனையை டெல்லிக்கு தெரிவித்துள்ளது மத்திய உளவுத்துறை.
ஏனெனில், தமிழகத்தில் கைது செய்வது திருமாவுக்கு அரசியல் ரீதியிலான இமேஜ் கிடைத்துவிடும்; அதை தடுக்க வேண்டுமானால் வேறு மாநில நடவடிக்கைத்தான் சரியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளதாம். தேவையான நேரத்தில் திருமாவை கைது செய்யும் அஸ்திரத்தை மோடி அரசு கையிலெடுக்கும் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.