vara

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டை சேர்ந்த அதிமுக மகளிர் அணி செயலாளராக இருப்பவர் வளர்மதி. ஆரம்ப காலத்தில் இருந்து வளர்மதி தொடர்ந்து கட்சியில் இருப்பதால் தனது மகன் அருண்குமாருக்கு ஏதாவது ஒரு அரசு வேலை கொடுக்க வேண்டும் என தொடர்ந்து ஜெயலலிதாவை வலியுறுத்தி உள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

அதன் அடிப்படையில், தான் கடந்த 2016 மார்ச் மாதம் இறுதியில் திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி செயலாளரான வளர்மதி மகன் அருண்குமாருக்கு தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஒ. போஸ்டிங் போட்டு கொடுத்து இருக்கிறார் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா.

அதன் அடிப்படையில் அருண் ஏ.பி.ஆர்.ஒ. வாக நியமிக்கப்பட்டதின் பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஒ.வாக அருண்குமார் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக மெடிக்கல் லீவு போட்டுள்ளார் அருண்குமார். அப்படி இருக்கும் போது திடீரென வத்தலக்குண்டில் உள்ள தனது வீட்டில் இருந்த காரில் போதை பொருளான கொக்கெயன் பதுக்கி வைத்து இருந்தார் என்ற அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அருண்குமார் மற்றும் வத்தலக்குண்டை சேர்ந்த நான்கு பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Advertisment

ops

இதுபற்றி அதிமுகவினர் சிலரிடம் கேட்டபோது.. இந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் வளர்மதி வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் தீவிர ஆதரவாளர். அதனால் தான் கோடை விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து மலர் கண்காட்சியை தொடக்கி வைத்து விட்டு திரும்பும் போது இந்த வளர்மதி முதல்வர் எடப்பாடிக்கு வரவேற்பு கொடுத்தார். அதன் மூலம் தற்பொழுது முதல்வர் வரை வளர்மதி நெருக்கம். அந்த அளவுக்கு வளர்மதி அரசியலில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மூலம் வளர்ந்து வருகிறார்.

அப்படி இருக்கும் போது திடீரென மகன் அருண் குமார் போதை பொருள் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டு இருப்பது எங்களுக்கு எல்லாம் ஒரு மனவருத்தம் தான். இருந்தாலும் இந்த அருண்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்து விட்டு இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது இப்ப போதை கேஸ்சில் சிக்கி வளர்மதியின் நிம்மதியை கெடுத்து கெட்ட பெயரையும் ஏற்படுத்தி விட்டார் என்று கூறினார்கள். இருந்தாலும் இந்த விஷயம் வத்தலக்குண்டு மட்டும்மல்ல மாவட்ட அளவில் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.