Union Minister L.Murugan issue in front of house Police action

Advertisment

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீட்டின் முன்பு ரயில்வேயில் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளாக பணி வழங்கவில்லை எனக் கூறி தமிழகத்தை சேர்ந்ததவர்கள் இரண்டாவது நாளாக இன்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அமைச்சர் எல். முருகன் வீட்டின் முன்பு எராளமானபோலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுஅப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.