Advertisment

நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து!

Two-wheeler collision on a four-lane road

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சி.என் பட்டடை என்னும் பகுதியில் சீனிவாசன் (50) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வன்னிய காட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதேநேரத்தில் சரவணன் (38) என்பவர் வள்ளிமலையில் இருந்து காட்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.

Advertisment

சி.என் பட்டடை 4 வழிச்சாலையில் வரும்போது இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வண்டியில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சீனிவாசன் மற்றும் சரவணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதா ஆம்புலன்ஸை வரவழைத்து இருவரையும் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் மோதிக் கொள்ளும் பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

katpadi police accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe