Two arrested for bringing banned items

திருச்சி தோகைமலை சாலையில், அதவத்துார் பிரிவு ரோட்டு பகுதியில் சோமரசம்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். மேலும், அவர்களிடம் இருந்த சந்தேகத்திற்கிடமான மூட்டைகளையும் சோதனை செய்தனர்.

Advertisment

அந்த சோதனையில், மூட்டைகளில் 86 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், போதை பொருட்களை கடத்தி வந்த அல்லித்துறையைச் சேர்ந்த பிரபு(42), அதவத்துார் சக்தி நகரை சேர்ந்த வினோத்குமார்(38) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisment