ADVERTISEMENT

தூத்துக்குடி சென்ற அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு!

11:15 AM May 24, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்தனர். இதில் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில், நேற்று தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்றதால் 143,188,153(ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT