/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttv s.jpg)
சென்னை ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் எம்.எம்.ஏ., டிடிவி தினகரன் தொகுதிக்குள் வர கடும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை டிடிவி ஆதரவாளர்களும் பதில் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதனால் இரு தரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, கல்வீசி தாக்கியவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும், கல்வீச்சு சம்பவத்தை தடுக்க முயன்ற போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஆர்.கே.நகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்படுகிறது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)