ttv flag

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் இன்று மதுரை மேலூரில் நடந்த விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கப் பெயர், கொடியை அறிவித்தார்.

Advertisment

கட்சிப் பெயர், கொடியை அறிமுகப்படுத்தி தொடர்ந்து பேசிய அவர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசான ஜெயலலிதாவின் தொண்டர்களாக நாம் செயல்பட உள்ளோம். உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும், எந்த தேர்தலாக இருந்தாலும் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம்.

Advertisment

அதுபோல, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அஇஅதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக இன்று முதல் செயல்பட்டு நிச்சயம் வருங்காலத்தில் அஇஅதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம். 4 மாதங்களாக பெயரில்லாமல் செயல்பட்ட நாம் தற்போது மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் செயல்படுகிறோம்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மொத்த உருவமாக திகழ்கிற ஜெயலலிதா அவர்களின் பெயரில் இனி இந்த இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு, வருங்காலத்தில் அது கூட்டுறவு சங்க தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயிரிலே செயல்படுவோம் என அவர் கூறினார்.

Advertisment