அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பின்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

Advertisment

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வந்தது. கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார் ஜுனா மற்றும் சிலர் கைதானார்கள்.

Advertisment

நீதிமன்றம் தினகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் கோர்ட்டில் முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டில் இருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தினகரனுக்கு ஏற்கனவே கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்ததால் இன்று தினகரன் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.