Skip to main content

போலீஸ் சொல்ல மறந்த உண்மை - ராஜ்குமாரை மீட்க நக்கீரன் மேற்கொண்ட பயணத்தை குறிப்பிட்டுச்சொன்ன நீதிபதி

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

 

ng

 

ராஜ்குமார் கடத்தல் 18 வருட விசாரணை நிறைவு பெற்று இன்று அவ்வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கின் விசாரணைக்கான போலீஸ் கொடுத்த கொடுத்த ஆவணங்களில் ராஜ்குமாரை மீட்க நக்கீரன் புலனாய்வு இதழ் மேற்கொண்ட பயணத்தை பற்றிய குறிப்புகள் இல்லாததை சுட்டுக்காட்டினார் நீதிபதி.

 

கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தன கடத்தல் வீரப்பன் குழுவால் கடந்த 30. 7.2000 அன்று தாளவாடி அருகே உள்ள தொட்ட காஜனூர் கிராமத்திலிருந்து கடத்தப்பட்டு வீரப்பனால் பிணை கைதியாக காட்டுக்குள் வைக்கப்பட்டார். இந்த கடத்தல் வழக்கில் தமிழ் தீவிரவாதிகளான மாறன், அன்றில், ஏழுமலை உட்பட 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கடந்த 18 வருடமாக வழக்கு விசாரனை நடந்து வந்தது. அதன் தீர்ப்பு இன்று காலை கோபிசெட்டிபாளையம் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அத் தீர்ப்பை வாசித்த நீதிபதி மணி,  குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்ததோடு இவர்கள் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று கடுகளவு கூட போலீஸ் நிரூபிக்கவில்லை என்றார்.

 

ng

 

மேலும் அவர் ராஜ்குமார் வீரப்பன் பிடியில் இருந்த போது தமிழக கர்நாடகா அரசுகள் வீரப்பனுடன்  பேச்சுவார்த்தை நடத்த நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களை இரு மாநில அரசுகளின் தூதராக நியமித்து காட்டுக்குள் அனுப்பியது. அது பற்றியெல்லாம் போலீஸ் கொடுத்த ஆவணங்களில்  எந்த குறிப்பும் இல்லை என்றார். 

 

வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரை மீட்க நக்கீரன் மேற்கொண்ட பயணத்தை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டது பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி அவர்களுக்கு விடுதலை பெற்று தந்தவர் மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகன்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 10/04/2024

 

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாக காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சடை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்