Advertisment

"நாங்கள் 45 கோடி டாலர் கொடுத்தோம், ஆனால் நீங்கள்?" ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...

கரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா அரசியல் செய்யவில்லை.உலக சுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

trump warns who on corona issue

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது.தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000 ஐ கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 4.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, அதில் 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்ததற்கு அவ்வமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.

"அமெரிக்காவில் அதிக அளவு கரோனா பரவி வருவதற்குக் காரணம், உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரிக்காதது தான்.சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு நடப்பதால், இனிமேல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போகிறோம்" என ட்ரம்ப் தெரிவித்தார்.ட்ரம்ப் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "கரோனா விகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்" என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

Advertisment

http://onelink.to/nknapp

உலக சுகாதார அமைப்பின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசியுள்ள ட்ரம்ப், "கரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்பின் தலைவர்தான் அரசியல் செய்கிறார்.கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்புக்காக நாங்கள் 45 கோடி டாலர் செலவு செய்தோம். அதற்கு முன்பும் லட்சக்கணக்கான டாலர்களைச் செலவு செய்திருக்கிறோம். அதைப் பயன்படுத்தி நன்றாகச் செயல்பட்டார்கள்.

சீனா 4.20 கோடி டாலர்தான் உலக சுகாதார அமைப்புக்காகச் செலவிட்டுள்ளது. ஆனால்,உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது. இது சரியல்ல.உலக சுகாதார அமைப்பு அனைவரையும்,அனைத்து நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும்.ஆனால் அதுபோன்று நடத்தியதாகத் தெரியவில்லை. எனவே,நாங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கப்போகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

trump corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe