Skip to main content

ட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு! தேதி, இடம் அறிவிப்பு!

Published on 10/05/2018 | Edited on 11/05/2018
trump kim

 

பலத்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் -  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது.  சிங்கப்பூரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த தகவலை ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அவர் அந்த  டிவிட்டில் மேலும்,  ’’இந்த சந்திப்பை உலக அமைதிக்கான முக்கிய தருணமாக மாற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்’’ என  தெரிவித்துள்ளார்.

 

trump

 

கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால் அமெரிக்காவை அழித்துவிடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அதற்கு வடகொரியாவை அழித்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் மிரட்டல் விடுத்தார். இதனால் போர் பதற்றம் நிலவியது.

 

இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அந்நாட்டின் வேண்டுகோளை ஏற்று வடகொரிய பிரதிநிதிகள் பங்கேற்றது பெரும் திருப்பமாக அமைந்தது. அதன்பின்னர் தென் கொரிய பிரதிநிதி கள் வடகொரியா சென்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம் அறிவித்தார். அதன்படி ஜூன் 12ல்  இரு நாட்டுத் தலைவர்களும் முதல்முறையாக சந்திக்க உள்ளனர். 

 

இந்த சந்திப்பின்போது கொரிய தீபகற்ப பிரச்சினைகளுக்கும், அணு ஆயுதங்கள் பிரச்சினைக்கும் தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .

Next Story

“அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றி” - நீதிமன்றத் தீர்ப்பால் மகிழ்ச்சியில் டிரம்ப்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Trump happy with court ruling and he posted "Victory for America" ​​

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ மாகாணத்தின் நீதிமன்றத்திலும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கொலராடோ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், இந்த ஆண்டு (2024) நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்தது. 

இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (05-03-24) அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடத் தடையில்லை எனக் கூறி கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப், சமூக வலைத்தளத்தில், ‘அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.