Published on 27/05/2020 | Edited on 28/05/2020

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் தேர்வு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.