The tragedy happened again in bus travel

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவன் ஒருவன் பேருந்தின்படியில் இருந்து விழுந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 12 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Advertisment

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில், பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளான். அதனைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.