Skip to main content

ட்ராஃபிக் ராமசாமி காலமானார்!

 

jk


பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.