தமிழகத்தில் 711 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணையில் அதிகபட்சமாகச் சென்னையில் 189 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. அதேபோல் மதுரையில் 41, கோவையில் 37, திருப்பூரில் 31 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.