Skip to main content

'தமிழகத்தில் 711 கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

TN GOVERNMENT CORONAVIRUS CONTAINMENT ZONES GAZATTE NOTIFICATION

 

தமிழகத்தில் 711 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணையில் அதிகபட்சமாகச் சென்னையில் 189 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. அதேபோல் மதுரையில் 41, கோவையில் 37, திருப்பூரில் 31 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இந்தியன் 2; சிறப்பு காட்சி கோரிக்கைக்குத் தமிழக அரசின் பதில்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Tamil Nadu government's response to the special display request for Indian 2

சமீப காலமாக முன்னணி நடிகர்களின் எந்தப் படத்திற்கும் அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜயின் ‘வாரிசு’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்கும் அனுமதியின்றி நள்ளிரவு, அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் எழுந்த சர்ச்சையின் காரணமாக சமீப காலமாக எந்தப் படங்களுக்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்குவதில்லை.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் நாளை (12-07-24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

நாளை வெளியாகவுள்ள இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சி வேண்டி லைகா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, நாளை காலை 9 மணிக்கு இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

‘ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு...’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Tamil Nadu government notification on Attention of passengers traveling in omni buses

தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில  பதிவு எண்  கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில ஆம்னி  பதிவு எண் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர். இதனையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில், தமிழக அரசு நேற்று (17-06-24) வரை அதற்கான அனுமதி வழங்கியது.

இதனையடுத்தி, சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, திங்கட்கிழமை (பக்ரீத் பண்டிகை) என தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி இன்று (18-06-24) காலை வரை தமிழகத்தில் வெளிமாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில், இன்றுடன் அதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள் அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விதிகளை மீறி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர். பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும்பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முறைகேடாகவும், விதிகளை மீறியும் இயக்கப்படும் ஆம்னிப் பேருந்திகளின் இயக்கத்தை இனி அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள் எவரும் அத்தகைய விதிகளை மீறி தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டாம். 

அத்தகைய விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்திகள் இனி முடக்கப்படும் என்பதால் அதில் பயணிக்க வேண்டாம். இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது’ என்று தெரிவித்துள்ளது.