கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக முதல்வர் பழனிசாமி ஆணை.

Advertisment

இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

TN GOVERNMENT ANNOUNCED CORONAVIRUS

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்தில் கரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 144 தடை உத்தரவு நாளை மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் மார்ச் 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்கு தடை பொருந்தாதது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 06.00 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூட வேண்டும் எனவும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதைக் கவனத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.