Skip to main content

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா? 

Published on 30/10/2020 | Edited on 31/10/2020
tn congress

 

2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதான கட்சிகளைவிட கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக கணக்குகள் போட்டு வருகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் தேர்தலையொட்டி பணிகளை செய்து வந்தாலும், அக்கட்சிக்குள் விறு விறுப்பான வியூகங்கள் வகுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தேர்தல் நேரத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியே நீடித்தால் சரிப்பட்டு வராது என்று பெரும்பாலான காங்கிரஸார் நினைக்கிறாங்களாம். அவரை மாற்றிவிட்டு புதிய தலைவரின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கலாம் என்று, தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை மனதில் வைத்துக் கொண்டு சோனியாவிடம் வலியுறுத்தி வருகிறாராம் ப.சிதம்பரம். 

 

இது குறித்து அக்கட்சியின் சீனியர்களிடம் கேட்டபோது, ப.சி.யின் சிபாரிசை சோனியா காந்தி ஏற்கும் பட்சத்தில், அவர் ப.சிதம்பரத்தையே அந்தப் பொறுப்பை ஏற்கச் சொல்வார். அதை சிதம்பரம் ஏற்காவிட்டால், அழகிரியை மாற்ற வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் (படங்கள்)

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில இளைஞரணியின் செயற்குழு கூட்டம், இளைஞர் அணி மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில், தேசிய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு கலந்து கொண்டார். அவரை தமிழக காங்கிரஸ் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் தரமணி ஆர். விமல் மாலை அணிவித்து வரவேற்றார்.
 

Next Story

தொகுதிவாசிகளுக்குத்தான் சீட்! - ராகுல்காந்திக்கு போகும் புகார்கள்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

ddd

 

ஒவ்வொரு தேர்தலின்போதும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தொகுதிக்குச் சம்பந்தமில்லாத பலரும் சீட் வாங்கி விடுகின்றனர். இதனால் காலம் காலமாக உழைத்த தொண்டர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில்லை. டெல்லியில் உள்ள மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் படைத்த பலரும் சீட் வாங்கி விடுவதால், உழைக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கு சீட் கிடைப்பதே இல்லை என்கிற குரல் தமிழக காங்கிரசில் வலுத்து வருகிறது. 

 

இந்த நிலையில், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் அப்படி நடந்து விடக்கூடாது என இப்போதே டெல்லி தலைமைக்குப் புகார்களை அனுப்பி வருகிறார்கள் உண்மையான கதர்ச்சட்டை தொண்டர்கள். குறிப்பாக, தமிழக காங்கிரசில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் சில முக்கிய விசயங்களைப் பின்பற்ற வேண்டும் என கோஷ்டி அரசியலில் சிக்காத கதர்ச்சட்டை நிர்வாகிகள், ராகுல் காந்திக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.  

 

அதாவது, ’’தொகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முறை சீட் வழங்க வேண்டும். மாவட்டம் மாறி, தொகுதி மாறி சீட்டு கேட்பவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது. கட்சியின் தலைவராக இருந்தாலும் இந்த நடைமுறையைக் கடைப்பிடியுங்கள். 

 

திமுக கூட்டணியில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் கேட்டு வாங்குங்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் சம்மந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்தவரையே வேட்பாளராகத் தேர்வு செய்ய வேண்டும். தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சம்மந்தப்பட்டவரின் பெயர் இருப்பதோடு, சம்மந்தப்பட்டவர் தொகுதியிலேயே வசித்தவராக, வசிப்பவராக இருப்பது அவசியம். தொகுதி மாறியோ, மாவட்டம் மாறியோ சீட்டுகள் யாருக்கும் ஒதுக்கக்கூடாது. 

             

அப்படி ஒதுக்கினால், தொகுதிமாறி நிற்கும் நபரால் ஜெயிக்க முடியாது. இந்த தேர்தலில் மண்ணின் மைந்தர்களைத்தான் வாக்காளர்கள் தேடுகிறார்கள். அதனால், இந்த ஒரு முறையாவது தொகுதியில் வசிப்பவர்களுக்கு சீட் வழங்குங்கள்‘’ என்று சோனியாவுக்கும் ராகுலுக்கும் மெசேஜ் பாஸ் செய்துள்ளனர் கோஷ்டிகளில் சிக்காத காங்கிரஸ் தொண்டர்கள். 
                      

’’இந்த குரல் நியாயமானதுதான். ஆனால் கட்சியில் உள்ள சாமானியர்களின் குரலை எங்கள் மேலிடம் பரிசீலிக்குமா, என்ன?’’ என்கிறார் முன்னாள் தலைவர் ஒருவர் நம்மிடம் நமட்டுச் சிரிப்புடன்!