Advertisment

ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டியிடும்! வைகோ உறுதி!

vaiko

Advertisment

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் ம.தி.மு.க போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் ம.தி.மு.க தலைமையகமான தாயகத்தில், வைகோ தலைமையில்சூளுரை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, மத்திய அரசு மாநில மொழிகளை, தனித்தன்மையை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூர்க்கத்தனமாகச் செயல்படுகிறது.

Advertisment

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும். தி.மு.க தனிப்பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடித்து ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. வரும் தேர்தல் அ.தி.மு.க.விற்கு மரண அடியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Election mdmk tn assembly vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe