Advertisment

சாத்தான்குளத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் நியமனம்!

thoothukudi district saththaankulam police inspector appointed

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இறந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கனவே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக வடச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்ட்சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள சேவியர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; " மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக செயல்படுவேன். நாளை (29/06/2020) பொறுப்பேற்க உள்ளேன். சாத்தான்குளம் சம்பவம் போல இனி தமிழ்நாடு முழுவதும் எங்குமே நடக்காது" என்றார்.

police station saththaankulam Thoothukudi district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe