Advertisment

திருவாரூர் இடைத்தேர்தல்- தி.மு.க வேட்பாளராக மு.க.ஸ்டாலினுக்குப் பெருகும் ஆதரவு!

st

கலைஞரின் மரணத்தால் ஜனவரி 28ந் தேதி இடைத்தேர்தலை சந்திக்கும் திருவாரூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகமாக உள்ளது.

Advertisment

கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர். திருவாரூர்வாசிகளிடம் மண்ணின் மைந்தரான கலைஞருக்குத் தனி மதிப்பு இருப்பதால், அவர் உடல் நலன் குன்றியிருந்தபோதே அடிக்கடி திருவாரூர் தொகுதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

Advertisment

அடுத்த பொதுத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில்தான் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் இருந்தது. இந்நிலையல், இடைத்தேர்தலில் கலைஞரின் தொகுதியில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் போட்டியிட்டால் பொதுமக்களின் அமோக ஆதரவு கிடைக்கும் என கள நிலவரம் குறித்த அறிக்கைகள் தி.மு.க. தலைமைக்குக் கிடைத்த நிலையில், குடும்பத்திலிருந்து புதிதாக யாரையும் தேர்தல் களத்தில் நிறுத்துவதைவிட, பொதுத்தேர்தலில் திருவாரூரில் போட்டியிடவுள்ள மு.க.ஸ்டாலினே போட்டியிட்டால் அது கட்சிக்குப் பெரும் பலத்தைத் தரும்-வெற்றியை உறுதிசெய்யும் என்பதால் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

தி.மு.க.வும் அதன் கூட்டணியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ள திருவாரூர் தொகுதியில் இதுவரை அ.தி.மு.க. ஒரு முறைகூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

thiruvarur by election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe