திருவள்ளுவர் தினம்: மோடி மரியாதை! 

Thiruvalluvar Day: PM Modi honor!

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொளியை பகிர்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அக்காணொளியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

thiruvalluvar
இதையும் படியுங்கள்
Subscribe