The President returned the bill that had been pending for three years. Photograph: (tngovt)
சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வேண்டும் என நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மற்றும் நீக்கும் அதிகாரம் தமிழக ஆளுநரிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் ஆளுநர் அதுகுறித்து முடிவெடுக்காமல் நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்த மசோதா மீது எந்த முடிவும் குடியரசு தலைவர் எடுக்காமல் இருந்தார். இந்தநிலையில் குடியரசுத் தலைவரிடம் இருந்து தற்போது இந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான தகவல் தமிழக சட்டத்துறை இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு கூறி இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதேபோல பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி துறையில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கக் கூடிய அதிகாரம் மாநில அரசுக்கே வேண்டும் என்பது குறித்த மசோதாக்களின் நிலை இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என்றும் கருதப்படுகிறது.
Follow Us