Advertisment

மதுபான விற்பனையைத் தொடங்கி வைக்கக் காத்திருக்கும் மதுப்பிரியர்கள்... (படங்கள்)

Advertisment

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உச்சநீதி மன்ற ஆணையைத் தொடர்ந்து, மதுபானக் கடைகள் நாளை (அதாவது இன்று) முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது.

மேலும் மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணியவேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோவை வீரகேரளம் மதுபானக் கடையில் இன்று காலையிலேயே மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கிக் காத்திருந்தனர்.

open tasmac shops Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe