Advertisment

தீர்ப்பு நமக்கே சாதகம் என முன்னேற்பாடுகளை செய்யும் கோவை டாஸ்மாக் அதிகாரிகள்

tasmac shop

டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் திறந்தபோது, இரண்டே நாட்களில் ரூபாய் 300 கோடியை அரசுக்கு வருமானமாக ஈட்டி கொடுத்தனர் மதுப்பிரியர்கள்.

Advertisment

ஆனால் அடுத்த நாளே, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும்,டாஸ்மாக் கடைகள் திறப்பால் கரோனோ பாதிப்பு அதிகமாகும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதுடன், ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.

Advertisment

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் கோவை தெற்கு மாவட்டத்தில் செயல்படும் 136 கடைகளில் க.எண். 1600,1676,1751,1761, 1775, 1864, 1871ஆகிய 7 கடைகள் மட்டும் மறு உத்தரவு வரும்வரை திறக்கக் கூடாதுஎனவும், மேலும் மீதமுள்ள 129 கடைகளிலும் தடுப்பு கம்பிகள் குறைந்தது 200 அடிக்கும், தன்னார்வலர்கள் 4 பேரின் பெயர் மற்றும் கைபேசி எண்கள், காவல் துறையினருடன் இணைந்து தேவையான முன்னேற்பாடுகளை செய்வது எனமேற்கண்ட அனைத்து பணிகளையும் இன்று முடித்த பின்பு போட்டோ எடுத்து அலுவலக வாட்ஸ் அப்பில் பதிவிடவும் என கோவை டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் தீர்ப்பு நமக்கே சாதகம் என கோவை டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் மட்டுமல்ல, கோவை மதுப்பிரியர்களும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த செய்தியைதெரிந்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

Coimbatore issue open tasmac shops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe