தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராகஷிவ்தாஸ்மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைமைச் செயலாளராகஇறையன்புபணிபுரிந்து வருகிறார். இவர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராகஷிவ்தாஸ்மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் தலைமைச்செயலாளராக இருந்து வந்தஷிவ்தாஸ்மீனா தற்போது தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஷிவ்தாஸ்மீனா நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர்வழங்கல்துறையைக்கவனித்து வந்தார். 1989 ஆம் ஆண்டுஐஏஎஸ்அதிகாரியான இவர் முதன் முதலில் காஞ்சிபுரம் உதவி ஆட்சியராகப் பணியைத்தொடங்கியவர். இவர் தமிழகத்தின் 49வதுதலைமைச்செயலாளர் ஆவர்.