சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

bus

ஜூன் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அம்பத்தூர், அண்ணா நகர், பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் பேருந்துகளை எடுக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு போக்குவரத்துத் துறை அளித்த பேட்டியின்படி, இன்று குறைவான ஊதியம்தான் தரப்படும் என வதந்தி பரவியுள்ளது. அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இன்று இரவுக்குள் சென்னை மாநகர அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் முழு ஊதியமும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.