தமிழக முதல்வர் அறிவித்தப்படி, நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1,000 வழங்குவதற்கானஅரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
15 நல வாரியங்களில் உள்ள 14,07,130 தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி சலவை, முடி திருத்துவோர்,கைத்தறி உள்ளிட்ட நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.