தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பரிசோதனை முடிந்து பிற்பகல் 02.00 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.இதனிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வதைச் சந்தித்து நலம் விசாரிக்க மதியம் 12.00 மணிக்கு முதல்வர் பழனிசாமி மருத்துவமனைக்குச் செல்கிறார்.