Advertisment

தமிழகம் ஊழல் மயமாகி உள்ளதை எந்த நேரத்திலும், எங்கும், எப்போதும் சொல்ல நான் தயார்: பொன்.ராதா!

தமிழ்நாடு ஊழல் மயமாகி உள்ளதை எந்த நேரத்திலும், எங்கும், எப்போதும் நான் சொல்ல தயார் என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் மாலையில் நாகர்கோவிலில் பா.ஜ.க மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது..

குமரி மாவட்ட வளர்ச்சி பற்றியும், அதற்கான திட்டங்கள் குறித்தும் தினமும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் ஆண்ட கட்சியினராலும், ஆளுகிற கட்சியினராலும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர் ஜெயக்குமாருக்கு நான் என்ன பேசினேன் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதையும் புரிந்து கொண்டு பேச வேண்டும்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

பத்திரிகையாளா்கள் கேட்ட கேள்விக்கு தான் நான் பதில் சொன்னேன். தமிழக்தில் 500 கோடிக்கு முட்டை ஊழல் நடந்து இருப்பதாகவும் அதற்காக முட்டை ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றேன். ஆண்ட கட்சியினரும், ஆளும் கட்சியினரும் ஊழல் செய்து இருக்கிறார்கள். தற்போது தமிழகம் ஊழல் மயமாகி உள்ளதை எந்த நேரத்திலும் எங்கும் எப்போதும் சொல்ல நான் தயாராக உள்ளேன்.

கோவளத்தில் வா்த்தக துறைமுகம் கண்டிப்பாக வந்தே தீரும். துறை ரீதியாக அதற்கான பணிகள் நடக்கிறது. மேலும் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் மேம்பாலம் பணிகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் முடிவு பெறும் என்றார்.

Pon Radhakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe