தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்தியக் குழு ஆலோசனை செய்து வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்திற்கான கரோனா கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மத்தியக் குழுவிடம் தமிழக அரசு விளக்கம் அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.