அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும்,காணொளி காட்சி மூலம் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பதா(அல்லது) தளர்த்துவதாஎன்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன. ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அதேபோல் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அது குறித்தும் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு அரசின் சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.