Published on 06/04/2020 | Edited on 06/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி தமிழகத்தில் வெளியே வாகனங்களில் சுற்றிய 90,918 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 69,589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 24.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.