தமிழகத்தில் மே 31- ஆம் தேதியோடு பொதுமுடக்கம் முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
மே 31- ஆம் தேதியுடன் முடியும் பொதுமுடக்கத்தை 5- வது முறையாக நீட்டிக்கலாமா? வேண்டாமா? எனக் கேட்டறிகிறார் முதல்வர். பொதுமுடக்கத்தை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது பற்றியும் முதல்வர் ஆலோசிக்கிறார். ஏற்கனவே மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படியே பொதுமுடக்கம் நீட்டிப்பு, தளர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.