அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாளை மறுநாள் நான்காவது பொதுமுடக்கம் முடியும் நிலையில், ஐந்தாவது முறையாகப் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும், கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவைக் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார். ஏற்கனவே மே 25- ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.