சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிசம்பர் 19- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். பிரதமரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் முதல்வர் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது முதல்வர், தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மனுவை வழங்கவுள்ளார். மேலும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வர் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.