Skip to main content

இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

tamilnadu cm palanisami meet governor

 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று (04/05/2020) மாலை 05.00 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி. கரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வுகள், உள்ளிட்டவை பற்றி ஆளுநருடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் கூறுகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரைத் தமிழக முதல்வர் இரண்டாவது முறையாகச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்” - ஆளுநர் எச்சரிக்கை

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

Governor Banwarilal  has warned that recommend President rule  Punjab

 

பஞ்சாபில் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய நேரிடும் என முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு முதல்வராக இருக்கும் பகவந்த் சிங் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே சட்டப் பேரவையைக் கூட்டுதல், பல்கலை. வேந்தர் பதவி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் முதல்வர் பகவந்த் சிங் மானுக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கு பகவந்த் சிங் எந்த விதப் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில்தான் ஆளுநர் பன்வாரிலால், மாநில சட்ட ஒழுங்கு குறித்து நான் எழுதும் கடிதங்களுக்குப் பதிலளிக்க வேண்டும். அப்படி பதில் அளிக்காவிட்டால் அரசியல் அமைப்பு சட்ட நடவடிக்கையைச் சீர்குலைத்துவிட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய நேரிடும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.