தஞ்சாவூர் திருவையாறை அடுத்த கபிஸ்தலத்தில் உள்ள காவிரி ஆற்றில் குழிக்க சென்ற ஆறு சிறுவர்கள், நீரில் மூழ்கி பலியாகினர்.
இந்நிலையில், இறந்த ஆறு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பலியான சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளார்.