Advertisment

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...'! (படங்கள்)

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுகதலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும்ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

Advertisment

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' எனக் கூறிமு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதைக் கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

Advertisment

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுவருகின்றனர்.

பதவியேற்பு விழாவில் வைகோ, திருமாவளவன், ப. சிதம்பரம், முத்தரசன், கி. வீரமணி, வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன், தனபால் மற்றும் பாஜக சார்பில் இல. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, விழா நடைபெறும் இடத்திற்கு வந்த தமிழக ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் பூங்கொத்துகொடுத்து வரவேற்றார். புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்களை ஆளுநரிடம் அறிமுகம் செய்துவைத்த மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களையும் அறிமுகம் செய்துவைத்தார்.

chief minister oath ceremony Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe