காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

Advertisment

பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (20/02/2020) "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வகை செய்யும் "தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்" சட்ட மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

Advertisment

TAMILNADU ASSEMBLY AGRICULTURE BILL PASSED CM SPEECH

நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு வேளாண் மண்டல மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இனி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளாகும். வேளாண் பயன்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களுமே வேளாண் நிலம் என பொருள்படும்.சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியுள்ள நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

இதனிடையே சட்டத்தை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment