நெல்லையில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேரில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 33- வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமாகியுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார் , தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர தயாளன், தலைமை செயலாளர் சண்முகம், உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

tamilnadu 33 th new district ceremony tenkasi cm palanisamy

மேலும் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புத்தூர், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகாக்களும் தென்காசியில் வருகின்றன. அதேபோல் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங்களும் தென்காசி மாவட்டத்தில் வருகின்றன.