Skip to main content

’தமிழகம் கல்வியில் உயர்ந்து நிற்கிறது’- பன்வாரிலால் புரோகித் பேச்சு

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
puvana

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தவர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார்.   அவரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்களும் கோயில் குருக்களும் பூர்ணகும்பமரிதை கொடுத்துவரவேற்றனர். கோயிலுக்குள் மங்கள வாத்தியம் முழங்க ஆளுனர் கோயிலுக்குள் சென்று சுவாமி, அம்பாள் சன்னதியில் அரைமணி நேரம் சுவாமி தரிசனம்செய்தார். கும்பகோணத்திலிருந்து திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்று அங்கு பாமா சுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு திப்பிராஜபுரத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொண்ட நான்கு பேருக்கு பாராட்டும், தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான ரொக்க சான்றும், சுதந்திரபோராட்ட தியாகி செண்பகராமன்பிள்ளையின் வெங்கலச்சிலையை திறந்து வைத்தார்.


மேலும், திப்பிராஜபுரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைத்தும், துப்புரவு பணிக்காக இரண்டுகுப்பை அள்ளும் வண்டிகளையும், பொதுமக்களுக்கு குப்பை கூடைகளையும் வழங்கினார்.

 

அப்போது நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில்,  " நான் இந்தியாவில் மகாராஷ்டிரா, அசாம், மேகாலயா உள்ளிட்ட இடங்களில் வேலை பார்த்துள்ளேன். தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ளேன். இதில் தமிழகத்தில் இதுவரை 25 மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளேன்.

 

என்னுடைய பயண அனுபவத்தில்  நான் பார்க்கும் போது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதை கண்கூடாக  பார்க்கமுடிகிறது.

 

தூய்மை இந்தியா திட்டம் இந்தியாவில் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி, சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் தூய்மைக்காக வாரத்துக்கு இரண்டு மணி நேரம் வீதமும், வருடத்துக்கு 100 மணி நேரமும் ஒதுக்கி நாட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்".  என்றார்.

 

இவ்விழாவில், மயிலாடுதுறை எம்பி ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார்,  முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரின் முதன்மை செயலாளர்  ஸ்ரீதரன், தமிழக ஆளுநரின் முதன்மை செயலாளர் ராஜகோபால்,  பாமா சுப்பிரமணியன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் எஸ். கார்த்திகேயன், ராம்பிரசாத், கிராமிய  திட்ட ஆலோசகர் கீதாராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என் முகத்தைப் பார்த்துதான் தமிழக மக்கள் சாப்பிடவே செல்வார்கள் என்று அமித்ஷாவுக்கு காதில் பூ வைத்தார்..." - புகழேந்தி அட்டாக்

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

jkl

 

தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கைகள், தமிழக முன்னாள் ஆளுநரின் குற்றச்சாட்டு என்று தொடர்ந்து பரபரப்பு குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனத்தில் பெரிய அளவிலான தொகை லஞ்சமாகப் பெறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவருக்கே உரிய அதிரடி நடையில் பதிலளித்துள்ளார்.

 


தமிழகத்தில் தான் ஆளுநராக இருந்தபோது பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்துக்கு 40 கோடி முதல் 50 கோடி வரை பணம் வாங்கப்பட்டது எனத் தமிழக முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அப்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் மறுத்துள்ள நிலையில் அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்தைக் கிளப்பி வருகின்றது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

இந்தக் குற்றச்சாட்டை யார் கூறியது என்று முதலில் நாம் பார்க்க வேண்டும். இதை தமிழக முதல்வராக இருக்கின்ற மு.க.ஸ்டாலின் அவர்களோ, அண்ணன் பன்னீர்செல்வமோ, திருமாவளவனோ, கம்யூனிஸ்ட் தோழர்களோ கூறவில்லை. இந்தக் குற்றச்சாட்டை கூறியவர் மத்திய அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டு தமிழகத்தில் பணியாற்றியவர். தற்போதும் ஆளுநராக வேறு மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது எதற்காக அவர் இதைக் கூற வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. பஞ்சாப்பில் இதே போன்று சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதே போன்ற ஊழல் நியமனங்கள்...தான் ஆளுநராக இருந்தபோது நடைபெற்றது, அதற்கு அப்போது ஆட்சியிலிருந்தவர்களுக்கு தொடர்பு இருந்தது  என்று கூறியுள்ளார்.

 

அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார், எடப்பாடி பழனிசாமி. அதில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இந்த நியமனங்களில் இவ்வளவு ஊழல் நடைபெற்றுள்ளது என்றால் அதற்கு இவர்கள்தானே பொறுப்பு. லஞ்சப்பணம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் 27 பேர் வேந்தராக நியமிக்கப்பட்டதில் இவர்களுக்கு எத்தனை கோடி பணம் கிடைத்திருக்கும். பல்கலைக் கழக வேந்தர் நியமனத்தில் மாபெரும் ஊழலை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது என்பது பட்டவர்த்தனமாக தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கான தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். பன்வாரிலால் சொல்கிறார் என்றால் மத்திய அரசே இவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊழல் பெருச்சாளிகள் விரைவில் மக்கள் முன்பு அம்பலப்பட்டு விடுவார்கள்.

 

இவர்கள் தமிழக மக்களை மட்டுமா ஏமாற்றினார்கள். தேர்தலுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷா எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரிடமும் பேசி தேர்தலில் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரிந்திருப்பது தோல்விக்கு வழிவகுக்கும், புலனாய்வு செய்திகள் அதை ஒத்தே இருக்கிறது என்ற எச்சரிக்கையைக் கொடுத்தார். அப்போது அண்ணன் ஓபிஎஸ் கூட அனைவரும் ஒன்றாக இணைந்தே தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்போம். இணைந்து செயல்பட்டால் தான் வெற்றி வசப்படும் என்று ஓப்பனாக சொன்னார். இதை அமித்ஷாவும் ஆமோதித்தார்.

 

ஆனால் எடப்பாடி பழனிசாமி, அய்யயோ...அப்படி எல்லாம் இல்லை. தமிழக மக்கள் என்னைப் பார்த்துத்தான் சாப்பிடவே செய்கிறார்கள், என்னைப் பார்த்துத்தான் எழுந்திருக்கிறார்கள், நான்தான் எல்லாமாக இருக்கிறேன். நான் தனியாக நின்றே பிரச்சாரம் செய்து வெற்றி பெறுவேன். புத்தன், ஏசு, காந்தி வரிசையில் என்னைத் தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என்று கூறி அமித்ஷாவுக்கு காதில் பூ வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதையும் தாண்டி எம்ஜிஆர் எல்லாம் சும்மா நான் அதற்கு மேல், 150 சீட்டை தட்டி தூக்கி விடலாம் என்று பொய்யை அளவில்லாமல் சொன்னவர்தான் இந்த பழனிசாமி. ஆனால் தேர்தல் முடிவுகள் யார் எம்ஜிஆர், யார் எடப்பாடி பழனிசாமி என்று காட்டிவிட்டது" என்றார்.

 

 

Next Story

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - ஆளுநர் புரோஹித் புதிய முடிவு!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

ோ

 

தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் புரோஹித் நியமித்தார். சூரப்பாவின் நியமனத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அப்போதே கடும் கண்டனங்களை தெரிவித்தன. அதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வந்தன.

 

இதனைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சூரப்பா இன்றுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் வழிகாட்டும் குழுவை அமைத்து ஆளுநர் புரோஹித் ஆணை பிறப்பித்துள்ளார்.