Tamil Nadu Chief Secretary K Shanmugam

Advertisment

தமிழக அரசின் தலைமைசெயலாளர் சண்முகத்தின் பதவிக் காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதியுடன் தலைமைசெயலாளர் பதவிக்காலம் முடியும் நிலையில் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சண்முகத்தின் பணிக்காலத்தை நீட்டிக்கும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பி இருந்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுள்ள மத்திய அரசு, ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என அரசு வட்டாரங்களில் கூறப்பட்ட நிலையில், இந்தப் பதவி நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.