Advertisment

தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Tamil Nadu Cabinet Meeting Date Notification

Advertisment

தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்கான தேதியை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 23 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் புதியதாகத் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், அரசின் கொள்கை முடிவுகள் குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் ஜனவரி 28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், ஜன.23ஆம் தேதி முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe