/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/402_28.jpg)
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கும் எடப்பாடி அரசு, பாஜக நடத்தும் போராட்டங்களுக்கு தடை விதித்து முடக்குகிறது என டெல்லிக்கு புகார் அனுப்பியுள்ளது தமிழக பாஜக.
இதற்காக, கவர்னருக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டம், கோவையில் உதயநிதி நடத்திய போராட்டம், மனுஸ்மிருதியை கொளுத்த வேண்டும் என திருமாவளவன் நடத்திய போராட்டம் உள்ளிட்டவைகளுக்கு எடப்பாடி அரசு அனுமதி தந்திருப்பதை அந்த புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.
அதேசமயம், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் திருமாவளவனை கைது செய்யாமல் எடப்பாடி அரசு பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது பாஜக! இதனையறிந்த அதிமுக தலைமை, போராட்டம் நடத்த அனுமதித்திருந்தால் பாஜகவின் யோக்கியதை தெரிந்திருக்கும். ஏன்னா, எந்த போராட்டத்திலும் கூட்டத்தை திரட்ட முடியாது பாஜகவால் முடியாது. குஷ்பு நடத்திய போராட்டமே இதற்கு சாட்சி.
அந்த வகையில் பாஜக போரட்டங்களுக்கு தடை விதித்து கைது செய்து மாலையில் விடுதலை செய்வதே பாஜகவுக்கு பெரிய அரசியல் இமேஜ்! இதுகூட தெரியாமல், ஆ…ஊ…ன்னா புகார் அனுப்பி விடுகிறார்கள் தமிழக பாஜகவினர் என சொல்லிச் சிரிக்கிறதாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)