விவேகானந்தர் கலாச்சார மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி படத்தை வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரியா தமிழ்ச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Advertisment

Korea tamil organization

குழுபுகைப்படம்

Advertisment

கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் கொரிய பொங்கல்-2020 நிகழ்வு கே-பயோ நிலையத்தின் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சுங் சோங் புக் தோ அரசு, மெல்பேரிஉணவகம் மற்றும் பயோ கோ-ஒர்டினட் சிஸ்டெம் ஆகிய நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கினர். கொரியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர், பெண்கள், குழந்தைகள் என 200 பேர் விழாவில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியாவிற்கான இந்திய துணைத்தூதர் சதிஷ்குமார் சிவன், சுங் சோங் புக் தோ மாநில அரசின் பிரதிநிதி மற்றும் மெல்பேரி-பயோ உரிமையாளர்கள் ரியூ ஜெ கியங், இன்சொக் கிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Korea tamil organization

அழைப்பிதழ்

முன்னதாக 26 சனவரி இந்திய குடியரசுதினம் என்பதால் கொரியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் இந்திய தேசியக் கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். நிகழ்வில் கலந்துகொண்ட கொரியாவுக்கான இந்திய துணைத் தூதர், தூதரகம் மற்றும் இந்திய அரசின் சார்பில் கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Korea tamil organization

கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்ட மாத நாள் காட்டியையும் வெளியிட்டார். அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்த விஞ்ஞானிகள் இருவரை தூதர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். குறிப்பாக தூதரகம் இங்குள்ள இந்திய மக்களுக்கு செய்யும் உதவிகள் பற்றி தெரிவித்த தூதர் மே 2020ல் அனுசரணை வழங்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் மக்களுக்கு தெரிவித்தார்.

Korea tamil organization

இந்த விழாவை சுங் சோங் புக் தோ மாநிலத்தில் நிகழ்த்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அரசின் பிரதிநிதி தமிழ் மக்களுக்கு கொரிய திருநாளான சொல்-நாள் (சந்திர வருட பிறப்பு) மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் குழந்தைகள் குழுவாகவும் பெற்றோருடனும் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் கிராமப்புற விளையாட்டுகள் நடைபெற்றன. விழாவில் கொரிய-இந்திய உறவுகளுக்கு கலாச்சார பண்பாட்டு மணம் பரப்பும் வகையில் கருத்தியல் மற்றும் செயல்முறையில் பொங்கல் திருநாளைப் போன்ற கொரியாவின் அறுவடைத்திருநாளான சுசோக் திருவிழா குறித்த காணொளி வெளியிடப்பட்டது.

Korea tamil organization

கொரிய தமிழ்ச் சங்கம்-பயோ கோ-ஒர்டினட் சிஸ்டெம் (Bio Co-ordinate System, Cheongcheong-buk-do Province, Korea சுங் சோங் புக் தோ மாநிலம்) நிறுவனம் இடையே கல்வி, சுற்றுலா, பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் தொழிலக உறவுக்கு பணியாற்றுதல் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கு வசதியாக இந்த விழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Korea tamil organization

கொரிய பொங்கல் நிகழ்விற்கு வைகோ எம்.பி., பத்மஸ்ரீ தமிழிசைக்கலைஞர் முனைவர் நர்த்தகி நடராஜ், பிளாஸ்டிக் மேன் ஆப் என்று அழைக்கப்படும் பேராசிரியர் பத்மஸ்ரீ இராஜகோபாலன் வாசுதேவன், தமிழர் தொன்மை-கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு, மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் சிவஞானம் வசந்தன் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர்.

Korea tamil organization

நிகழ்வின் முக்கிய அங்கமாக தமிழர் திருநாள் உரையாற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சுப்பிரமணியன் இராமசுந்தரம், கொரியா-இந்திய உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும், 1987 முதல் விரிந்திருக்கும் சமகால கொரிய தமிழர் வரலாற்றை விளக்கி, தமிழர்கள் தொழில்முனைவோராக, கொரியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றும் கண்டுபிடிப்பாளர்களாக மேன்மேலும் மிளிர வேண்டியதன் தேவைப்பாடு பற்றியும் பேசினார்.

Korea tamil organization

குறிப்பாக தமிழர்கள் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தபேசிய தலைவர், வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியே நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் அனைத்திலும் விவேகானந்தர் அவர்களின் புரவலர் மன்னர் பாஸ்கர சேதுபதியின் படத்தை திறந்து வைக்குமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மற்றும் வெளியுறத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிறைவேற்றுமாறு வேண்டினார்.

பொங்கல் நிகழ்வை சங்கத்தின் அறிவுரைக்குழுவினர் முனைவர்கள் போ. கருணாகரன், செ இரத்ன சிங், இரா.அச்சுதன், அ. அந்தோனிசாமி மற்றும் தா, செபக்குமார், துணைத்தலைவர் முனைவர் திருமதி கிறிஸ்ட்டி கேத்தரின், செயலர்கள்-முனைவர்கள் கு. இராமன், செ. ஆரோக்கியராஜ் மற்றும் மோ. பத்மநாபன், முதன்மை பொறுப்பாளர் லோ. ஆனந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், பிரபாகரன், மு. ஆனந்த், வே. ஜனகராஜ், மதி சரண்யா, பிரியா குணசேகரன், சரண்யா பாரதிராஜா, மதுமிதா வாசு, தெ. விஜயலட்சுமி மற்றும் இந்திரஜித் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.