/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Suresh Raina_0.jpg)
ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்தாண்டு நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19- ஆம் தேதி துபாயில் தொடங்கும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்பட அனைத்து அணியின் வீரர்களும் துபாய் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/csk_4.jpg)
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனும், முன்னணி வீரருமான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் விலகியதாகவும், சொந்த காரணங்களால் இந்தியாவுக்கு சுரேஷ் ரெய்னா திரும்பிவிட்டதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. விஸ்வநாதன், சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் வீரர் ஒருவர் உள்பட 13 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், ரெய்னாவும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)