அரசு வேலைவாய்ப்பு பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை என தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு அரசு வேலைவாய்ப்பு பதவி உயர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது. 2006ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, 7பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றத்தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.