a

Advertisment

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர்-6ல் இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பதற்றம் நிலவுகிறது. அயோத்தி விவகாரமே இதற்கு காரணம். அயோத்தி கலவரம் நடந்து இருபத்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் இப்போதும் டிசம்பர்-6களில் இதே பதற்றம் நீடிக்கிறது. அயோத்தி வழக்கிலும் இதே பதற்றம் இருந்து வரும் நிலையில், வழக்கு விசாரணை முடிந்து இன்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இஸ்லாமியர்கள் வழிபட்டு வந்த பாபர்மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம், ராமர் ஜென்மபூமி என்றும், ராமர் அங்குதான் பிறந்ததாகவும் இந்துக்கள் நம்பி கொடிபிடித்து பிடித்தனர். 90களில் இது வேகமெடுத்தது. 1991ம் ஆண்டில் உத்தர பிரதேச அரசு, ராமர் கோவில் கட்ட போகிறோம், அதற்காக வசதியாக நிலம் வேண்டும் என்று இந்த மசூதியை சுற்றி இருந்த நிலங்களை கையகப்படுத்தியது. அதன்பின்னர், 6.12.1992ல் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் இந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு மிகப் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

Advertisment

பாபர் மசூதி இடிப்பிற்கு எதிராக 2002ல் அலகாபாத் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 30.9. 2010ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அத்தீர்ப்பில், இந்த சர்ச்சைக்கு உரிய நிலத்தை உபி சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் இருந்த 5 நீதிபதிகளின் கருத்தும் ஒன்றாக இருந்ததால், தீர்ப்பை இன்று வெளியிட்டார் ரஞ்சன் கோகோய்.

Advertisment

1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், ‘பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. மசூதி கட்டப்பட்ட இடத்தில் கட்டுமானம் இருந்ததை தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. அந்த கட்டிடத்தை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. அதேபோல 1992ல் பாபர் மசூதியை இடித்தது தவறு.

ஆங்கிலேயர் வருகைக்கு முன், அந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தி உள்ளனர் என்பது பயணக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லீம்கள் மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.